search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி உயிரிழப்பு"

    சிவகாசி அருகே குளிக்க சென்ற போது தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள தடுப்பணைக்கு அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் இரவு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தடுப்பணை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து முத்துவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது முத்துவின் ஆடைகளும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முத்துவை தேடினர். சுமார் 4½ மணி நேர தேடுதலுக்கு பின்னர் முத்துவின் உடல் கிடைத்தது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தடுப்பணையில் குளித்த போது நீரில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
    தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தாராம். அங்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அவர் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக இறங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து குளத்தில் கால் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தவளக்குப்பத்தில் மனைவி பிரிந்து சென்ற வேதனையிலும், மகனும் இறந்து போனதாலும் கூலித்தொழிலாளி அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்து போனார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது40), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் இளங்கோவன் தனது மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவனின் மகனும் இறந்து போனார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்து வந்த இளங்கோவன் தனது ஒரே மகனும் இறந்து போனதால் சோகத்தில் அதிகமாக மதுகுடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இளங்கோவன் பிணமாக கிடந்தார். அக்கம்பக்கத்து வீட்டினர் இதனை பார்த்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து இளங்கோவன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கழனிவாசலில் அரசின் சார்பில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மேலப்பனையைச் சேர்ந்த செந்தில் (வயது 37) என்ற கட்டிடத் தொழிலாளி ஈடுபட்டு வருகிறார்.

    வழக்கமாக இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக செந்தில் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு செந்தில் தண்ணீர் தொட்டியின் மேலே சென்று தூங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்த அவர், தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றுள்ளார்.

    அப்போது நிலை தடுமாறி செந்தில் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாபநாசம் அருகே குடி போதையில் மது என்று நினைத்து பெயிண்டை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பாபநாசம்:

    பாபநாசம் வங்காரம் பேட்டை கீழவழிநடப்பு தெருவில் வசித்து வந்தவர் குமார் (வயது51). பெயிண்டர். இவர் குடிபழக்கம் உள்ளவர். அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மது என்று நினைத்து பெயிண்டை எடுத்து குடித்து விட்டார். 

    அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

    இதுபற்றிய புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை அருகே மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். #hospitalbuildingcollapses
    சென்னை:

    சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட்டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.



    நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச் சுவர் மீது விழுந்தது. மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன. பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது. மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த பீகாரை சேர்ந்த ராஜன் சவுத்ரி(30) என்ற தொழிலாளி இன்று உயிரிழந்தார்.

    கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ஜினீயர்கள் 2 பேரை  கைது செய்தனர். #hospitalbuildingcollapses

    ×